Thursday, December 29, 2011

access restricted websites in office

Thursday, December 22, 2011

பாகம் 3 ::: வெட்கக்கேடான உண்மைகள் ::: பாகம் 3





இதற்கு முந்தய பாகங்களை படிக்க... பாகம்-1 மற்றும் பாகம்-2

ஏழைக்கோ, பிச்சைகாரருக்கோ குடுக்கும் போது 20 ரூபாய் பெரியதாக தோன்றும் நமக்கு.
ஹோட்டலில் டிப்ஸ் குடுக்கும் போது அதே 20 ரூபாய் சிறியதாக தோன்றும்.

கடவுளிடம் பிரார்த்தனை செய்வதற்கு 3 நிமிடம் ஒதுக்குவது சிரமமாக தோன்றும்
அனால் சினிமா பார்க்க 3 மணி நேரம் ஒதுக்குவது ஈசியாக தோன்றும்.

நாள் முழுதும் உழைத்துவிட்டு ஜிம்முக்கு போவது கஷ்டமாக இருக்காது
அனால் வீட்டில் உள்ள வேலைகளை பார்ப்பது மிகவும் கஷ்டமாக இருக்கும்.

காதலர்கள் தினத்திற்காக வருடம் முழுவதும் காத்திருப்போம்
அனால் அன்னையர் தினம் என்று வரும் என்பது தெரியாது நமக்கு.

பணம் ஒரு பிசாசு என்போம் அனால் அதை சம்பாதித்து கொண்டே இருப்போம்.
பதவி உயர உயர தனிமைப்படுத்தபடுவோம் என்போம் ஆனால் பதவி உயர்வு வேண்டும் என்போம்.
குடி குடியை கெடுக்கும் என்போம் ஆனால் குடித்து கொண்டே இருப்போம்.



இந்த பதிவுக்கு கமெண்ட்ஸ் போடுவது சிரமமாக இருக்கும்
அனால் மொக்கை பதிவு போடுவதற்கு மட்டும் சிரமம் தெரியாது



கேவலமான உண்மைகள் - பாகம் 2

Monday, December 19, 2011

வலையுலக பதிவர்களா? பதிவுலக வலையர்களா?... காப்பி & பேஸ்ட் செய்யும் மா.... ஜென்மங்களின் லிஸ்ட்





வலையுலக பதிவர்கள் என்று கேள்வி பட்டிருக்கோம். அது என்ன பதிவுலக வலையர்கள்??
அதாங்க copy & paste பண்றதையே பொழப்பா வச்சிருக்கிற சில மானங்கெட்ட ஜென்மங்களை தான்(நன்றி சொல்லாத,மன்னிப்பு கேட்காதவர்களை மட்டுமே) பதிவுலக வலையர்கள் என்று அழைக்கின்றேன்.
இப்படி அழைப்பது ஒன்றும் தவறில்லையே?

tamilyouthcafe.com என்ற வலையை வச்சிருக்கிறவன் என்னுடைய அணைத்து பதிவுகளையும் ஆட்டைய போட்டுட்டான் மக்கா.....
அவனுடைய வலை முகவரியை தமிழில் அழைத்தால் எப்படி இருக்கும் தெரியுமா? தமிழ்யூசூத்காப்பிகடை.காம்

இதில் வேடிக்கை என்னவென்றால் காப்பி பேஸ்ட் பதிவை போட்டுவிட்டு அதற்கு கீழே காப்பி ரைட்ஸ் வேற போட்டிருக்கான் (©2011 தமிழ்யூசூத்காப்பிகடை.காம் All rights reserved).

ஒருவேளை அவன் என்னிடம் வந்து "உன் பதிவ நான் வச்சிக்குறேன் அதுக்கு பதிலாக என்னோட .........வை நீ வச்சுக்கோன்னு" டீல் பேசினால் போனால் போகிறது என்று டீல் ஓகே சொன்னாலும் சொல்லுவேன் மக்கா..

என் பதிவை தொடர்ந்து படிக்கும் வாசகர்கள் மேற்க்கண்டவாறு பேசியதற்காக என்னை மன்னித்துக் கொள்ளவும்.

என்னுடைய அடுத்த பதிவு 25-வது பதிவு. அதற்காக இந்த 24-வது பதிவை விறுவிறுப்பாக கொடுக்க வேண்டும் என்று இருந்தேன். அதற்குள்ளாக இப்படிப்பட்ட பதிவை போடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்..

enayamthahir.com நடத்தும் அன்பரே நீங்கள் இட்ட copy & paste பதிவின் இறுதியில் தவறான தளத்திற்கு இணைப்பு முகவரியை கொடுத்துள்ளீர்கள். அதை நீக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். உங்கள் பதிவின் பின்னூட்டதிலும் இதை தெரிவித்து இருந்தேன். மேலே கூறிய தளத்திற்கு உதவ வேண்டாம் என்று கேட்டுகொள்கின்றேன். திருத்தி கொள்ளவில்லை என்றால் உங்கள் enaiyamthahir வலை enaiyamthavir வலையாக மாறிவிடும்.

வாசகர்களே உங்களுக்கு தெரிந்த காப்பி & பேஸ்ட் பதிவர்களின் வலை முகவரியை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.அனைத்து முகவரியையும் தொகுத்து பின்னர் ஒரு பதிவில் வெளிப்படுத்தப்படும்.

உசாரய்யா உசாரு... copy & paste உசாரு...

Sunday, December 18, 2011

ரஜினி நினைத்திருந்தால் தி.மு.க மடிந்து புல் பூண்டு முளைத்திருக்கும் - கருணாஸ்



நாட்டில் ஒருவரை பாராட்ட வேண்டும் என்பதற்காக அடுத்தவரை குறை சொல்வது ஃபேசன் ஆகி விட்டது.
குறிப்பாக தமிழ்நாட்டில் இது மிகவும் அதிகம்.

இப்படித்தான் கடந்த வாரம் ரஜினி பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஏற்பாடு செய்திருந்த விழாவில் கருணாஸ் என்ற வாய் துடுக்கு நிறைந்த நகைச்சுவை நடிகர் மிகவும் உணர்ச்சி பொங்க பேசியுள்ளார்.

அவர் ரஜினியை பாராட்டிய நேரத்தை விட மற்ற நடிகர்களை விமர்சித்து பேசிய நேரம் தான் அதிகம். ரஜினி அரசியலுக்கு வருவதில் அவருக்கு இல்லாத அக்கறை இவருக்கு என்ன? ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பதில் அவரின் ரசிகர்களுக்கு ஏன் அவ்வளவு ஆர்வம்? ஏனென்றால் ரஜினியின் பெயரை சொல்லி அவர்களும் சம்பாதிக்க தான். விஜயகாந்த் ரசிகர் மன்ற தலைவர்களுக்கு கிடைத்த பதவி, மரியாதை இவற்றை கண்டு பொறுக்க முடியாதவர்கள் தான் ரஜினியை தூண்டி விட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

ஒருவேளை ரஜினி அரசியலுக்கு வர நினைத்தால் அவருக்கு கிடைக்க போகும் நெருக்கடிகள் ஏராளம். வருமான வரித்துறை, தனிப்பட்ட மனித தாக்குதல் போன்றவற்றில் இருந்து தப்பிப்பது சுலபம் அல்ல.

விஜயகாந்த் விசயத்தில் இதை நீங்களே பார்த்திருப்பீர்கள். அவர் நல்லவரோ கெட்டவரோ அது நமக்கு தேவை இல்லை. ஆனால் அரசியலுக்கு வந்தது முதல் அவர் இழந்தது ஏராளம். சொத்து, மானம் மரியாதை அத்தனையும் இழந்திருக்கிறார்.

என்னடா பதிவின் தலைப்பிற்கும் மேட்டருக்கும் சம்பந்தமே இல்லையே என்று நினைகிறீர்களா? இதோ விசயத்திற்கு வருவோம்.
ரஜினி விழாவில் கருணாஸ் கீழ் கண்டவாறு கூறியிருக்கிறார்.

"ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதினால் தான் விஜயகாந்த் எதிர் கட்சி தலைவராக இருக்கிறாராம்". ஒருவேளை அவர் சொல்லியபடியே ரஜினி அரசியலில் இருந்திருந்தால் விஜயகாந்த் எதிர் கட்சி தலைவராக இருந்திருக்க முடியாது. அப்படி என்றால் தி.மு.க-வின் நிலைமை? அந்த கட்சி மண்ணோடு மண்ணாகி இந்நேரம் அந்த இடத்தில் புல் பூண்டு முளைத்திருக்கும்.

ஆக தி.மு.க கட்சி தான் ரஜினிக்கு மிகவும் கடமை பட்டிருக்கிறது

Thursday, December 15, 2011

"ஊருக்கு தான் உபதேசம் எனக்கு இல்லை" - ரஜினி



ரஜினியின் ஸ்பெசாலிட்டி அவருடைய பஞ்ச் டயலாக்...
அந்த பஞ்ச் டயலாக்கின் உள்ளே ஒளிந்திருக்கும் உண்மையான அர்த்தம் சற்று அதிர்ச்சி தருவதாகவே உள்ளது.
ரஜினியின் பஞ்ச் டயலாக் அனைத்தும் அவருடைய சுய நலத்தையே காட்டுகின்றது.

பஞ்ச் டயலாக்கும் அதன் உள்ளருத்தமும்...

பஞ்ச்: நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது ஆனால் வரவேண்டிய நேரத்தில் கரெக்ட்டாக வருவேன்
உள்ளருத்தம்: அவரு வருவாராங்குறது அவருக்கே தெரியாது. அப்புறம் எப்படி வருவார்.. இந்த டயலாக்கை சொல்லி சொல்லியே தமிழ் ரசிகர்களின் மனதில் ஆசை உண்டாக்கி விட்டு விடுவது தான் ரஜினியின் பாலிசி.. அதை நம்பி அவர் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல ஒரு விழாவை ஏற்படுத்தினால் அதில் கலந்து கொள்ள கூட இவர் வரமாட்டார். கேட்டால் மேற்கண்ட பஞ்ச் டயலாக்கை சொல்லுவார்.. தமிழனுக்கு புத்தி எங்க போச்சுன்னு தெரியல...

பஞ்ச்: பன்னிங்க தான் கூட்டமா வரும் சிங்கம் சிங்குளா தான் வரும்
உள்ளருத்தம்: இவரு படம் ரிலீஸ் ஆச்சுன கூட்டம் கூட்டமா ரசிகர்கள் வருவாங்க. அப்போ அவர்களை அறிவு கெட்டபன்றி என்று சொல்கிறாரா?இவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல ரசிகர்கள் கூட்டம் கூட்டமா வந்தார்களே... இவர்கள் பன்றிகளா?இவரு தமிழனுக்காக சிங்கமாக சிங்குளாக எந்த பிரச்சினைக்காக குரல் குடுத்திருகிறாரா?

பஞ்ச்: rich are getting richer poor are getting poorer
உள்ளருத்தம்: இவரு மட்டும் படத்துக்கு படம் பல மடங்கு சம்பளம் அதிகமாக வாங்குவாரு. அப்போ பணக்காரன் மேலும் பணக்காரனா தான் ஆவான். இவரு படத்த பாக்குற நடுத்தர அடித்தட்டு மக்கள் மேலும் ஏழையா தான் ஆவாங்க.

பஞ்ச்: கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீ தான் அதற்கு முதலாளி... கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அது தான் உனக்கு முதலாளி
உள்ளருத்தம்: இத எல்லாம் கேட்டு நாம காசு சேர்த்து வைக்க கூடாது. ஆனால் அவரு மட்டும் சேர்த்து வைப்பார். இவருக்கு இப்போ முதலாளி காசு தான்.

பஞ்ச்: சாப்பிட்டது வயித்துலயே தங்கிட்டா உடம்பு கெட்டுடும் அதே மாதிரி சம்பாதிச்சத நீயே வச்சுக்கிட்டா நாடு கெட்டுடும்
உள்ளருத்தம்: இவரு இவருக்கே செலவு பண்ண மாட்டாரு (கேட்டால் சிம்ப்ளிசிட்டியாம்).. மத்தவங்களுக்கும் பண்ண மாட்டாரு. நாடு கெட்டு போனதுக்கு இவரும் ஒரு காரணம்.

பஞ்ச்: அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும் அதிகமா கோவப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே கெடையாது
உள்ளருத்தம்: இந்த பஞ்ச் டயலாக்கை கேட்டு நாமலாம் அதிகமா ஆசைப்பட கூடாது. ஆனால் இவரு மட்டும் அதிகமா ஆசைப்படுவார். கோடி கொடியை சம்பாதிப்பார்.

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... இவரு சிம்ப்ளிசிட்டினு காட்டுவதற்காக சாதாரண உடை, செருப்பு தான் பயன்படுத்துகிறார். சாதாரணமான மனிதனுக்கு எதற்கு அசாதாரணமான சம்பளம். வெளிப்பார்வைக்கு தான் சிம்பிள். உள்ளுக்குள்ளே பேராசை பிடித்தவர் தான்.

Monday, December 12, 2011

திருட்டு VCD-க்கு காரணம் ரஜினி, கமல்??

சினிமாவ நம்பி பலபேரோட பொழப்பு ஓடுது.
சினிமாவ பாத்து பலபேரோட பொழப்பு ஓடுது.

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நம் ஹீரோ அப்படி என்ன தான் நடித்திருக்கிறார் என்று படம் பார்ப்பதில் நம் அனைவருக்குமே ஒரு ஆவல் உண்டு.
ஏதோ திருட்டு VCD(DVD) சமாச்சாரத்துக்கு மக்கள் மட்டுமே காரணம் என்று இந்த சினிமாக்காரர்கள் புலம்புகின்றனர்.
இதில் 10% தான் உண்மை. மக்கள் மட்டும் காரணம் இல்லை மக்களும் தான் காரணம்.

இப்பொழுது திருட்டு VCD மேட்டருக்கு வருவோம்.

திருட்டு VCD வாங்குவதினால் இது மக்களிடம் இருந்து தான் ஆரம்பிகின்றது. இதில் அவர்களுக்கு இரண்டு மனநிலை.
நம்ம பணத்தை திருட்டு குடுப்பதா அல்லது அடுத்தவன் பணத்தை திருடுவதா என்று? இன்று சராசரியாக நான்கு பேர் கொண்ட குடும்பம் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க குறைத்து 500 ரூபாய் தேவை. (டிக்கெட் 300, பார்கிங் -50, puff/பாப்கார்ன்/ட்ரிங்க்ஸ் 150). இது பகல் கொள்ளை தான்.
500 ரூபாய் திருட்டு கொடுப்பதா இல்லை 30 ரூபாய் செலவு செய்து திருட்டு VCD வாங்குவதா என்றால் சராசரி நடுத்தர வர்க்கம் இராண்டாவது சாய்ஸ்-ஐ தான் விரும்புவர்.

எதற்காக தியேட்டரில் பகல் கொள்ளை அடிக்கிறார்கள்? அவர்கள் விநியோகஸ்தர்களிடம் நிறைய பணம் கொடுத்து தான் படப்பெட்டியை வாங்குகிறார்கள்.
இதில் விநியோகஸ்தருக்கோ இலாபம் கம்மி தான். இப்படி அதிக விலை கொடுத்து படத்தை வாங்கி திரை இட்டால் டிக்கெட் விலையும், ஸ்நாக்ஸ் விலையும் தாறுமாறாக தான் இருக்கும்.

எதற்காக அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும். தயாரிப்பாளர் இலாபம் கருதி அதிக விலைக்கு விற்றாக வேண்டி இருக்கிறது. தயாரிப்பாளர் ஒன்றும் அதிகமான இலாபம் எதிபர்ப்பதில்லை. எந்த ஒரு தயாரிப்பாளரும் ஹீரோவின் சம்பளத்தை விட கொஞ்சம் அதிகம் இலாபம் வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.
பின்ன என்ன தன்கிட்ட வேலை செய்யும் ஹீரோவை விட முதலாளிக்கு அதிகமாக இலாபம் இருக்க வேண்டும் என்பது நியாயமே.

இப்பொழுதெல்லாம் ஹீரோவின் சம்பளமே ஒரு படத்தின் பட்ஜெட்டில் பெரும் பங்கு வகுக்குகிறது. இதற்கு மேலே ஃபாரின், பைவ் ஸ்டார் ஹோட்டல், பிசினஸ் கிளாஸ் ட்ராவல், லொட்டு லொசுக்கு..

MGR, சிவாஜி காலத்திலெல்லாம் இப்போது போல் சம்பளம் இல்லை. என் அறிவுக்கு எட்டியவரை இந்த அதிகபடியான சம்பளம் ரஜினி சூப்பர் ஸ்டார் ஆனதில் இருந்து தான். ரஜினியின் இன்றைய சம்பளம் ஒரு நடுத்தர IT கம்பெனியின் வருமானத்திற்கு நிகரானது. ரஜினி அளவுக்கு கமலுக்கு வர்த்தகம் இல்லாவிட்டாலும் சமகால நடிகன் என்பதால் தானும் ரஜினி அளவுக்கு சம்பளம் எதிர் பார்க்கிறார். இவர்களைதான் மற்ற ஹீரோக்களும் பின் பற்றுகிறார்கள்.
இவர்கள் யாரும் தயாரிப்பாளரை நினைத்து பார்ப்பதில்லை.

எப்படி விலைவாசிக்கு பெட்ரோலின் விலை ஏற்றம் காரணமோ அப்படிதான் திருட்டு VCD-க்கு ரஜினி, கமல் தான் காரணம்.

வெளி இடங்களில் தன்னை ரொம்பவும் எளிமையாக காட்டிகொள்ளும் சூப்பர் ஸ்டார் பணத்தாசையை விட்டு குறைந்த சம்பளித்தில் நடிக்க வந்தால் தமிழ் திரையுலகம் சுடர் விட்டு எரியும். முன் வருவாரா சூப்பர் ஸ்டார்?

Sunday, December 11, 2011

சம்பள உயர்வு பெறுவது எப்படி? பாகம்-2

ஏழாம் அறிவு படம் வெற்றி... ஆனால் தோல்வி....

பேக்டரிய டெவெலப் பண்ணுனதில் இருந்து வெண்ணை வேணும் பண்ணு வேணும்னு காலங்காத்தால வந்துடுரானுங்க.
அதே மாதிரி ஏழாம் அறிவு படம் ரிலீஸ் ஆனாலும் ஆச்சு ரிவியு, கமெண்ட், பதிவுன்னு ஆளாளுக்கு எழுத ஆரம்பிச்சுட்டாங்க.

நம்ம பங்குக்கு நாமளும் எதாச்சும் எழுதலேன்னா இந்த பதிவுலகம் நம்மள மன்னிக்காது.
அதனால இந்த பதிவு.

ஏழாம் அறிவு படம் வெற்றி தான் ஆனால் தோல்வி....
அது எப்படி வெற்றிப்படம் தோல்வி ஆகும். ஆபரேஷன் சக்சஸ் பேசன்ட் ஃபெய்லியர் மாதிரி தான்.

ஒரு நல்ல நடிகர், திறமையான இயக்குனர், திறமையான மியூசிக் டைரெக்டர், உலகத்தரம் வாய்ந்த வில்லன், சிறந்த பப்ளிசிட்டி,இதற்கு மேலாக சிறந்த கதை அம்சம் கொண்ட ஒரு படம்தான் ஏழாம் அறிவு.

இதற்கு நேர் மாறாக நடிக்க தெரியாத நடிகர், சொந்தமாக படம் எடுக்க தெரியாத இயக்குனர், சுமாரான மியூசிக் டைரெக்டர், அனைவருக்கும்பரிச்சயமான வில்லன்(அதாங்க நம்ம தளபதி விஜய்), கதையே இல்லாத ஒரு படம் தான் வேலாயுதம்.

கலெக்சன் ரீதியாக இரண்டு படங்களுமே கிட்டதட்ட சரி சமம் தான்.
இதிலிருந்து பார்த்தால் ஏழாம் அறிவு தோல்வி படமே.

அதற்கு மேலாக ஏழாம் அறிவு படத்தின் பட்ஜெட் 80 கோடி ரூபாய். இப்பொழுதான் இந்த படம் 80 கோடி ரூபாய் கலெக்சன் செய்திருக்கிறது.இனி எப்பொழுது லாபம் பார்ப்பது?

ஏழாம் அறிவு மக்கள் மத்தியில் வெற்றி அனால் தயரிப்பாரளுக்கோ, சுர்யாவுக்கோ தோல்வி படம் தான்.

Saturday, December 10, 2011

மின் கட்டண உயர்விருந்தாலும் மாதந்திர தொகையில் மாற்றம் இருக்காது... எப்படி?

இன்னும் மூன்று மாதத்திலோ அல்லது ஆறு மாதத்திலோ தமிழ்நாட்டில் மின்சார கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது.

இந்த கட்டண உயர்வில் இருந்து பொது மக்கள் பாதிக்க படக்கூடாது என்பதற்காக மின் கட்டண உயர்விருந்தாலும் மாதந்திர தொகையில் மாற்றம் இல்லாத ஒரு திட்டத்தை அரசு அதிகாரிகள் தீட்டியுள்ளர்கள்.

அந்த திட்டத்தின் படி மின் கட்டண உயர்வுக்கு ஏற்ப அனைத்து ஊர்களிலும் அதிகபடியானநேரம் மின்வெட்டு இருக்கும். இதனால் அதிகபடியான மாதாந்திர கட்டணம் செலுத்துவதிலிருந்து பொது மக்கள் காப்பாற்ற படுவார்கள்.

Thursday, December 8, 2011

ஆமை புகுந்த வீடும்.... வடிவேல் புகுந்த கட்சியும்.....

நம்மில் பலர் ஆமை புகுந்த வீடு உருப்படாது என்ற பழமொழியை சொல்ல கேட்டிருப்போம். இதில் ஆமை என்பது எதை குறிக்கும் என்பது நம்மில் பலருக்கு தெரியாது. எது எப்படியோ நமக்கு அது

இப்பொழுது முக்கியம் இல்லை.

கடந்த வாரத்தில் மிகவும் பரபரப்பான செய்தி என்னவென்றால் வடிவேலு அதிமுக-வில் இணைய போகிறார் என்பதுவே.

ஏற்கனவே வடிவேலு சேர்ந்த திமுக கட்சியின் நிலைமை, அதன் முன்னாள் அமைச்சர்களின் கதி என்னவென்று அனைவரும் அறிந்ததே.
இப்பொழுது வடிவேலு அதிமுக-வில் இணைய போகிறாராம்.

அதிமுக கட்சி இப்பொழுது சொந்த செலவில் சூனியம் வைத்துள்ளது. அதாங்க விலைவாசி, ஜெ-வின் அடாவடித்தனமான நடவடிக்கையால் மக்களிடம் கெட்ட பெயர் தான் அந்த கட்சிக்கு கிடைத்துள்ளது.

எப்படியும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அந்த கட்சி படு தோல்வி அடையபோகிறது.
இந்த நிலைமையில் வடிவேலுவும் அந்த கட்சியில் இணைந்தால் நிலைமை மேலும் மோசம் தான். அப்புறம் அனைவரும் மேலே சொன்ன பழமொழியை மறந்து கீழுள்ள புதுமொழியை சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.

"ஆமை புகுந்த வீடும், வடிவேல் புகுந்த கட்சியும்____________________________"
நீங்களே கோடிட்ட இடத்தை நிரப்பி கொள்ளவும்.

இந்த புதுமொழிக்கு இடம் தராமல் இப்போதிருக்கும் இடத்திலேயே வடிவேல் இருப்பது தான் அவருக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது.

சிந்திப்பாரா வடிவேலு????



Wednesday, December 7, 2011

நடிகர் சூர்யா அதுக்கு எல்லாம் சரிப்பட்டு வரமாட்டார்....

என்னடா இவரு இப்படிப்பட்ட தலைப்பு வச்சிருக்காருன்னு யோசிக்கிரிங்களா??
நடிகர் சூர்யா அதுக்கு எல்லாம் சரிப்பட்டு வரமாட்டார்.... எதற்கு?
மேலே வாசிக்கவும்.

நடிகர் சூர்யா நடித்ததில் வெற்றி பெற்ற படங்கள் மிகவும் கம்மி தான்.
அதுவும் கடந்த இரண்டு வருடங்களாக தான் தொடர் வெற்றி போடுகிறார்.
அதற்கு காரணம் சூர்யா அல்ல. சுர்யாவிற்காக மட்டுமே எந்த படமும் ஓடியதில்லை.
இருந்தாலும் அவர் படங்கள் எப்படி வெற்றி பெறுகிறது என்று பார்த்தால் அதற்கு
காரணங்கள் டைரக்டர் or திரைக்கதை or பாடல்கள் or நகைச்சுவை மட்டும் தான் காரணங்கள்.

மௌனம் பேசியதே, காக்க காக்க, நந்தா, அயன் போன்ற படங்களில் அனைத்தும் புதுமுக டைரக்டர்கள் தான்.
இதிலும் மௌனம் பேசியதே மட்டும் தான் அறிமுக இயக்குனர். மற்ற மூன்று படங்கள் அந்த இயக்குனர்களுக்கு இரண்டாம் படம்.
இந்த நான்கு படங்களும் அதில் இருந்த திரை கதைக்காக ஓடியவை. மேலே சொன்ன நான்கு படங்கள் தவிர சூர்யாவின் மற்ற வெற்றி படங்கள் அனைத்திலும் நல்ல திரைக்கதையும் அனுபவம் வாய்ந்த இயக்குனர்களும் தான்.

ஆகா சுர்யவிற்காக ஓடிய படங்களே இல்லை என்று சொல்லலாம்.

மாறாக விஜய் நடித்ததில் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, பிரெண்ட்ஸ், கில்லி, காவலன் தவிர அனைத்து வெற்றி படங்களிலும் அறிமுக இயக்குனர்கள் தான். போக்கிரி, வேலாயுதம், சிவகாசி, திருபாட்சி, வேட்டைக்காரன் மற்றும் பல
படங்கள் விஜய்காக மட்டுமே ஓடியவை. விஜய் பட தொகுப்பை இங்கே காணலாம்.
பல படங்கள் நல்ல திரைக்கதை இல்லாமல் அனுபவ இயக்குனர் இல்லாமல் வெற்றி பெற்றவை.

அஜித்தின் படங்களும் கிட்ட தட்ட விஜய் படங்கள் மாதிரி தான். அஜித்மற்றும் விஜய் இடையேயான
ஒப்பிட்டுக்கு என்னுடைய முந்தய பதிவுகளை பார்க்கவும்.

நல்ல திரைக்கதை இல்லை என்றால் சூர்யா படம் மிகப்பெரிய வெற்றி அடைவது கஷ்டம் தான்.
உதாரணமாக 'ஏழாம் அறிவு'.

இப்பொழுது உங்களுக்கே தெரிந்திருக்கும் சூர்யா எதற்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று.
அட இன்னுமா தெரியவில்லை அதாங்க 'மாஸ் ஹீரோ' என்ற அடைமொழிக்கு சரிப்பட்டு வரமாட்டார்.




Sunday, December 4, 2011

அஜித்தின் 100-வது படம் மாரியாத்தா-வின் கதை சுருக்கம்.....

தல அஜித் நடிக்கவிருக்கும் 100-வது படமான மாரியாத்தா-வின் கதை கசிந்து இன்டர்நெட்டில் பல பதிவர்களால் பதிவாக எழுத பட்டுள்ளது.
நீங்கள் படிக்கவில்லை என்றால் உங்களுக்காக கீழே.

கரு: மாரியாத்தா கோவில் கூழ் அண்டாவை ஆட்டைய போடுவது
Cast:
அஜித்: சஸ்பெண்டு செய்யப்பட்ட சமையல்காரர்
அர்ஜுன்: தலைமை சமையல்காரர்(chief cook)
பிரேம்ஜி: மாரியாத்தா கோவிலில் பிட்சை எடுக்கும் பிச்சைகாரர்
மற்றும் பலர்.

படம் ஆரம்பிக்கும் போது அஜித் raymond கோட் சூட் போட்டுகொண்டு ஒரு கல்யாணத்தில் சமையல் செய்து கொண்டிருக்கிறார். அப்பொழுது அங்கு நடக்கும் ஒரு சண்டையில் அனைவரையும் அடித்து ஒருவரை காப்பாற்றுகிறார். (காப்பாற்றபட்டவர் மாரியாத்தா கோவில் தர்மகர்த்தாவின் வேலையாள்). சமையல் செய்யும் போது அடிதடியில் இறங்கியதால் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

அது மார்கழி மாதம் என்பதால் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாரியாத்தா கோவிலில் கூழ் உத்துகிரார்கள். அப்பொழுது அங்கு வரும் ஒரு 7star ஹோட்டல் அதிபர் கூழை சுவைக்கிறார். அவருக்கு அதன் சுவை மிகவும் பிடித்து போகவே சமையல்காரரான அஜித்தை அழைத்து கூழ் பண்ணி தர முடியுமா என்கிறார். ஒரு அண்டாவிற்கு 10 கோடி ரூபாய் விலை பேசுகிறார்.

கூழ் சமைக்க தெரியாத அஜித் மாரியாத்தா கோவில் கூழ் அண்டாவை ஆட்டைய போட பிளான் பண்ணுகிறார்.

சில நாட்கள் கழித்து அவர் கோவில் தர்மகர்த்தாவை சந்திக்கிறார். சந்திப்பதற்கு முன்னர் அஜித் தர்மகர்த்தா-வின் பெண்ணை காதலிக்கிறார்.
காதலிக்கும் போது அவர்கள்
கூழ் கூழ் கூழ் உன்னை தேடி அலைந்தேன்..................
என்ற டூயட் பாடலை பாடுகிறார்கள்.

ஒருநாள் மாரியாத்தா கோவிலுக்கு செல்லும் போது மூன்று நபர்கள் அங்கு பிச்சை எடுத்துக்கும் பிரேம்ஜியை இழுத்துக்கொண்டு செல்கிறார்கள். பின் தொடரும் அஜித்துக்கு அப்பொழுது தான் தெரிகிறது அவர்களும் கூழ் அண்டாவை ஆட்டைய போட பிளான் பண்ணுகிறார்கள் என்று.
உடனே அஜித்
"சிவாஜி படத்துல ரஜினி அடிச்சா cool......
ஆனா இந்த தல அடிச்சா கூழ்"

அப்படினு டயலாக் பேசிக்கொண்டே அவர்கள் முன்னாடி தோன்றுகிறார். அஜித் அவர்களிடம் எதற்காக பிச்சைகார பிரேம்ஜியை இந்த ஆட்டத்தில் சேர்த்தீர்கள் என்கிறார். அதற்கு பிரேம்ஜி "இன்பர்மேசன் இஸ் வெல்த்" அப்டின்னு பாய்ஸ் பட செந்தில் டயலாக் பேசிக்கொண்டே தான் வைத்திருக்கும் ஐபேட்-ஐ ஆன் செய்து எந்த கோவிலில் எப்பொழுது கூழ் ஊற்றுகிறார்கள் என்று படித்து சொல்கிறார். உடனே அஜித் பிரேம்ஜியின் முதுகில் தட்டிகுடுக்கிறார். உடனே பிரேம்ஜி "மச்சி ஒப்பன் தி பாட்டில்" என்றதும் குத்து பாடல் ஆரம்பம் ஆகிறது.

"உப்பு கருவாடு காச்சி வச்ச கூழு... ஊட்டி விட நீ போதும் எனக்கு.
முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில செத்து விட தோணுதடி
எனக்கு.................."

இந்த பாடலை கேட்டதும் chief குக் அர்ஜுனுக்கு கோபம் வருகிறது. அது எப்படி முதல்வன் படத்தில் நான் பாடிய பாடலை அஜித் உல்டா பண்ணலாம் என்று. அஜித்தை பலி வாங்குவேன் என்று சபதம் எடுக்கிறார்.

அனைத்து கோவில்களுக்கும் சென்று கூழை ஆட்டைய போடுவதற்கு நிறைய ஆட்கள் தேவைப்படுமே என்று யோசிக்கும் போது பிரேம்ஜி சொல்கிறார் "எல்லா கோவிலுக்கும் சென்று திருடுவதை விட எல்லா கோவிலுக்கும் சப்ளை செய்யும் குடோனில் இருக்கும் கண்டெய்னரில் இருந்து எளிதாக இருக்கும் ஆட்களை வைத்தே அடிக்கலாம்" என்கிறார். ஐடியா நன்றாக இருக்கவே அதற்கு திட்டம் தீட்டுகிறார்கள்.
அதன்படி ஓடும் கண்டெய்னரில் இருக்கும் அண்டாவில் ஓட்டை போட்டு ஒரு பைப் மூலமாக வேறொரு அண்டாவுக்கு கூழை ட்ரான்ஸ்பர் செய்கிறார்கள்.
அப்பொழுது அங்கு அர்ஜுன் வருகிறார். அவரை பார்த்ததும் அனைவரும் பயப்படுகிறார்கள். பிரேம்ஜி பீதியில் யூரின் போகிறார்.
உடனே அஜித்
"மூக்குல சளி ஒட்டுனா கிளைமேட் cool....
பட் மீசையில் ஒட்டுனா அது கூழ்
"
என்று பஞ்ச் டயலாக் அடிக்கிறார். இதை கேட்டதும் அர்ஜுன் தன்னோட கிளாஸ்மேட் தான் அஜித் என்று உணர்கிறார். இருவரும் "நண்பேண்டா" என்று கட்டி அணைக்கிறார்கள்.

படம் முடிகிறது.

ஒய் திஸ் கொலைவெறி டா.... ஆண்களுக்கு சாட்டையடி

இந்த பாடல் வரிகளை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி கொலைவெறி டா....
ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி கொலைவெறி டா....

Dawn-u கம்மு வி go வொர்க்கு
யு சிட் there-u ஸ்மோக்கு
money கம்மு யு டேக் & spend-u
ஹவ் do ஐ feed the kids-u?

யு say லவ்வு லவ்வு ஓ மை லவ்வு
ஐ showed யு bou-u
but லவ்வு லவ்வு here இஸ் cow-u
இட் கிவ்ஸ் back more than யு
நவ் யு டெல் மீ who இஸ் ரைட்டு
ஆர் யு ஹாப்பி நவ்வு?
திஸ் song இஸ் for ஆல் தி கேர்ள்ல்-u
வி have தி சாய்ஸ்-u

ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி கொலைவெறி டா....

hand-ல knife-u
knife-la blood-u
wife ஆகிட்டா கேர்ள் future-u அவுட்டு

parents பிரஷர்
beyond culture
வி see தி பிக் picture

மை ஹார்ட் ஹார்ட்-u நவ் இஸ் break-கு
இட் இஸ் because of யு
பிரேக்கு பிரேக்கு வாட் எ பிரேக்கு
மை pail இஸ் full of tear-u

இ ஹவ் gave in சோ மச் லவ்வு
யு still கம்ப்ளைன் how-u?
யு வில் நெவெர் அண்டர்ஸ்டேன்ன்டு அவர் plight-u
வாட் ஆம் ஐ to do நவ்வு?

ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி கொலைவெறி டா....
ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி கொலைவெறி டா....



Why this kolaveri da? Strong message to all men

Why this kolaveri kolaveri kolaveri da
Why this kolaveri kolaveri kolaveri da

Once we're married hell is life-u
Life-u total out-u
Out-u 0ut-u you say out-u
We stand here hurt-u

Why this kolaveri kolaveri kolaveri da

Dawn-u come-u, we go work-u
You sit there smoke-u
Money come-you take spend-u
How do I feed the kids-u

You say love love o my love I showed u bou-u
But love love here's cow-u
It gives back more than you-u
Now u tell me who is right-u
Are u happy now-u ?
This song is for all girls-u..we have the choice-u

Why this kolaveri kolaveri kolaveri da

Hand-le knife-u
Knife-le blood-u
Girl-u future out-u

Parents pressure
Even culture
We see the bigger picture

My heart heart-u now is break
It is because of you-u
Break break what a break-u
My pail is full of tear-u

I have gave in so much love-u,
You still complain how-u?
You will never understand our plight-u
What am I to do -u


Why this kolaveri kolaveri kolaveri da





To listen this song: http://www.youtube.com/watch?feature=player_embedded&v=U1d3dKGb3Eg


Tuesday, November 22, 2011

பணக்காரங்க.. பஸ்லலாம் போறாங்க - bus fare increase

ஒரு சின்ன கணக்கு 
பால் விலை உயர்வு - ரூபாய் .12/-(6*2 litre)

பஸ் கட்டண உயர்வு - ரூபாய் .4/-
(சராசரி நாள் ஒன்றுக்கு கூடுதல்
செலவு உத்தேசமாக ))

மின் கட்டண உயர்வு- ரூபாய்.4/-
(உயர்த்தப்பட உள்ளது
நாள் ஒன்றுக்கு கூடுதல்
செலவு உத்தேசமாக )
மொத்தம் நாள் ஒன்றுக்கு - ரூபாய்.20/-
மாதம் ஒன்றுக்கு - ரூபாய்.600/-(30*20)
ஆண்டுக்கு - ரூபாய்.7200/-
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு - ரூபாய்.36000/-

இலவச மிக்சி,grinder,பேன் மதிப்பு - ரூபாய்.6000/-

நிகர தெண்டம். - ரூபாய்.30000/-

பின் குறிப்பு:
1.ஆட்டுக்கு மாலை போட்டு மரியாதை செய்வது பிரியாணியை மனதில் வைத்து தான்.
2.இந்த அரசு உங்களுக்கு தோளில் துண்டு போடுவது,உங்கள் வேட்டியை உருவத்தான்.(நாகரிகம் கருதி வேட்டி என்று எழுதி இருக்கிறேன் )
3.அண்ணா ' நாமம்' வாழ்க, புரட்சி தலைவர் 'நாமம்' வாழ்க

















Nandri: Facebook nanbar bala

Thursday, November 17, 2011

இளைய தளபதி ஒரு டிரென்ட் செட்டர்(trendsetter) - ஓர் அலசல்

தளபதி டிரென்ட் செட்டர்(trendsetter) என்று சொன்னால் வியப்பாக இருக்கிறதா?
இங்கே அவரைப்பற்றி எப்படி டிரென்ட் செட்டராக இருக்கிறார் என்று பார்ப்போம்.

சூப்பர் ஸ்டார் ரஜினி, அவரின் ஸ்டைல், பஞ்ச் டயலாக் பற்றி அனைவர்க்கும் தெரியும்.
10 or 15 வருடங்களுக்கு முன்பு அவர் நடிக்கும் போது அவருடன் நடித்த எந்த நடிகரும் 
அவருடைய ஸ்டைலை or நடிப்பை or பஞ்ச் டயலாக்கை யாரும் பின்பற்றவில்லை
என்பது உண்மையே.

இப்போது தளபதி மேட்டருக்கு வருவோம். எந்த காலகட்டத்தில் எப்படி டிரென்ட் 
செட் பண்ணினார் என்று பார்ப்போம்.

ஃப்ரேம் இல்லாத கண்ணாடி:
     இளைய தளபதி 'நினைத்தேன் வந்தாய்' படத்தில் ஃப்ரேம் இல்லாத சிறிய அளவிலான 
கண்ணாடி அணிந்து நடித்திருப்பார். இந்த வகை கண்ணாடி இந்த படத்தின் ரிலீஸ்க்கு 
அப்புறம் ரொம்ப பிரபலம் ஆனது.

Cross body bag (உடம்புக்கு குறுக்காக அணியும் பை):
     இளைய தளபதி 'சச்சின்' படத்தில் உடம்புக்கு குறுக்காக அணியும் பை அணிந்து நடித்திருப்பார். 
இந்த வகை பை இன்றளவும் கல்லூரி மாணவர்களிடையே  ரொம்ப பிரபலம்.

ஆக்சன் மூவீஸ்:
    தளபதி திருமலை, கில்லி, திருபாச்சி, சிவகாசி என்று ஆரம்பித்த டிரென்ட்டுக்கு இன்று அனைத்து
நடிகர்களும் அடிமை.

குத்து பாட்டு:
     விஜய் படத்தில் தொடர்ச்சியாக குத்து பாட்டு இருக்க்கும். இதுவே இப்பொழுது எல்லா
நடிகர்களும் பாலோ செய்கிறார்கள்.

ஹீரோவுக்கான ஒபெனிங் பாடல்:
    இதற்கு ரஜினி முன்னோடி என்றாலும் விஜய்க்கு அப்புறம் தான் டிரெண்டாக செட் ஆனது.

ரீமிக்ஸ் பாடல்கள்:
    70, 80 வருடங்களில் வந்த பாடல்களை ரீமிக்ஸ் செய்வதை தொடங்கி வைத்தவர் விஜய் தான்.

பாடல்களில் கலர் கலராய் உடை அணிவது:
    தன்னோட கலருக்கு பொருத்தம் இல்லாத கலர் கலராய் உடைகளை பாடல்களில் அணிந்து
நடித்தவர் தளபதி தான். அஜித் கூட ஆழ்வார், பரமசிவன் படத்தில் அதை ட்ரை பண்ணி இருப்பார்.

பஞ்ச் டயலாக்:
    இந்த டிரெண்டுக்கு ரஜினி தான் மூல காரணம். ஆனால் விஜய் அவரது படங்களில் யூஸ் 
பண்ணிய பிறகே இன்றைய ஹீரோக்கள் பாலோ பண்ணினார்கள்.

ரீமேக் மூவிஸ்:
   இந்த டிரென்ட் செட் பண்ணியவர் விஜய் என்று யாருக்கும் சொல்ல தேவை இல்லை.

கடைசியாக
பெயருக்கு முன்னால் போடும் பட்டம்:
     சின்ன தளபதி, புரட்சி தளபதி, குட்டி தளபதி என்று விஜயை பார்த்து பட்டம் சூட்டி கொள்கிறார்கள்.

Wednesday, November 16, 2011

ரீமேக் கிங் தலயா? தளபதியா? - ஓர் அலசல்

கடந்த சில பதிவுகளில் நாம் தல & தளபதியின் ஹிட் லிஸ்ட்-ஐ பாத்தோம்.
இருவரில் யார் வென்றார்கள் என்பது பற்றி பின்னொரு பதிவில் பார்ப்போம்.

இந்த பதிவில் யார் ரீமேக் கிங் என்று பார்ப்போம்.

தல இதுவரை 5 ரீமேக் படங்களில் நடித்துள்ளார். 
மொத்தம் நடித்த 50 படங்களில்(guest appearance நீங்கலாக) 4 ரீமேக்.
சதவிகித அடிப்படையில் 10%.

தளபதி இதுவரை 7 ரீமேக் படங்களில் நடித்துள்ளார். 
மொத்தம் நடித்த 59 படங்களில்(guest appearance நீங்கலாக) 7 ரீமேக்.
சதவிகித அடிப்படையில் 11.8%.

சதவிகித அடிப்படையில் பார்த்தால் தலயும் தளபதியும் கிட்டத்தட்ட சமமானவர்கள்.

எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் தளபதி தான் ரீமேக் கிங்.
அவசரப்பட வேண்டாம் மேலும் படிக்கவும்.

தல இதுவரை இரண்டு நேரடி தமிழ் படங்களின் ரீமேக்கிங்கில் நடித்துள்ளார்.
ஜனா(ரீமேக் of பாட்ஷா), பில்லா.
தமிழ் படத்தை ரீமேக் செய்து தன்னுடைய மார்க்கெட்-ஐ நிலை
 நிறுத்தி கொல்லும் நிலையில் தான் தல அஜித் உள்ளார் என்பது சற்று வருத்தம் தரக்கூடிய செய்தி தான்.

தளபதிக்கு இன்னும் அந்த நிலை வரவில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு சற்று ஆறுதலான விஷயம் தான்.

முடிவு: ரீமேக் கிங் is our ultimate star தல அஜித்.

கேவலமான உண்மைகள்

1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!!

2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!


3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!!
(சில மாதங்களுக்கு முன்பு)

4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!


5.ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!!


6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..!!


7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான இரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!!


8.மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள.


9.கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!!


10.பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலமாவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை..!!!


11.குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்...!!!!








நன்றி: Facebook நண்பர் பாலா

இந்த பதிவு தளம் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உங்கள் வருகை தானாக புதிய தளத்திற்கு செல்லவில்லை என்றால் பின்வரும் வலை முகவரியை கிளிக் செய்யவும்.