Wednesday, November 16, 2011

கேவலமான உண்மைகள்

1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!!

2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!


3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!!
(சில மாதங்களுக்கு முன்பு)

4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!


5.ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!!


6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..!!


7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான இரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!!


8.மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள.


9.கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!!


10.பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலமாவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை..!!!


11.குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்...!!!!








நன்றி: Facebook நண்பர் பாலா

6 comments:

  1. gahdhi nallvar.anal naan gandhi aga thayar illai

    ReplyDelete
  2. சமுத்ரா உங்கள் கருத்தை வரவேற்கிறேன். நன்றி

    ReplyDelete
  3. Mr. Vajoor தயவு செய்து மதம் சம்மந்தபட்ட கருத்துகளை பதிவு செய்ய வேண்டாம்.

    ReplyDelete
  4. வாஞ்சூர் ஐயா, இங்கே எதுக்கு இந்த லிங்க்? தினமலர் உங்களுக்குப் பிடிக்கலேன்னா படிக்காமல் விடுங்களேன். அடிக்கடி குண்டு வெச்சு அப்பாவி மக்களைக் கொல்கிற உங்கள் சமுகத்தைச் சார்ந்த சில தீவிரவாதிகளைப் பற்றியும் கொஞ்சம் திட்டி ஏதாவது எழுதுங்க.. அப்புறம் உங்க பக்க நியாயத்தைக் கேட்கிறோம்.

    ReplyDelete
  5. @தமிழ் பையன்

    உங்கள் கருத்துக்கு நன்றி

    ReplyDelete

இந்த பதிவு தளம் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உங்கள் வருகை தானாக புதிய தளத்திற்கு செல்லவில்லை என்றால் பின்வரும் வலை முகவரியை கிளிக் செய்யவும்.